ராணிப்பேட்டை அருகே உள்ள நந்தியா லம் கிராமத்தில் மழை நீர் தேங்கி கடும் பாதிப்பு!
ராணிப்பேட்டை , அக் 28 -
ராணிப்பேட்டை மாவட்டம், விசாரம் அருகே உள்ள நந்தியாலம் கிராமத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரண மாக, ஏரி நிறம்பியுள்ளது ஏரியை சுற்றியு ள்ள பகுதிகளில் நீரூற்று ஏற்பட்டு நீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, சர்ச் தெரு, மாங்குப்பம் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடிகால்வாய் வசதி முறையாக இல்லாத தாலும், கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து மூடியுள்ளனர் .மழை நீர் வெளி யேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தேங்கிய நீரில் விஷ ஜந்துக்கள் மற்றும் கொசுக் கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.எனவே, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, தேங்கிய நீரை வெளியேற்றவும், ஆக்கிரமிப்ப களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து, நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக