திருப்பத்தூரில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக் கான அறிவியல் கண்காட்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 அக்டோபர், 2025

திருப்பத்தூரில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக் கான அறிவியல் கண்காட்சி!

திருப்பத்தூரில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக் கான அறிவியல் கண்காட்சி!
திருப்பத்தூர் , அக் 16 -

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி கல்வித் துறை சார்பில் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் முன்னிட்டு  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 25 பள்ளி மாணவ மாணவிகளுக் கான அறிவியல் கண்காட்சியை திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தர வல்லி  தொடக்கி வைத்தார்.இதில் 25 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் கோட்டை தெரு பகுதியில் உள்ள உஸ்மானியா மேல்நிலைப் பள்ளியில் கழிவு நீரில் நெகிழிகள் மாட்டிக்கொண்டால் அதனை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் எடுத்துக் கூறினர். இதனைக் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களை யும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி மற்றும் வட்டார கல்வி அலுவலர் தேவ சகாயம், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad