விவசாய பயிர்களுக்கு உரம் தட்டுப்பாடு
உரம் வாங்கி கூடுதல் விலைக்கு விற் பனை செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
குடியாத்தம் , அக் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி சுற்றுவட்டாரப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இந்தப் பகுதியில் பெரும்பாலானோர் கரைவை மாடுகளை வைத்துக் கொண்டு நெல் கேழ்வரகு கரும்பு வாழை பப்பாளி உள்ளிட்ட பயிர்களை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அதிகளவில் தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில் தனியார் உரக்கடையில் உரங்களை கூடுதல் விலைக்கு விற் பனை செய்து வருவதாகவும் அதுவும் முழுமையாக கிடைக்க பெறாத நிலை யில் இன்று பரதராமி அடுத்த வீரிசெட்டி பல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உரம் வந்ததாக வந்த தகவலின் பெயரில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரம் வாங்க முண்டியடித்து வந்தனர் மேலும் இன்று காலை முதலே ஆண் பெண் விவசாயிகள் நீண்ட நேர மாக உரம் வாங்க காத்திருப்பதாகவும் விவசாயம் நிலம் இல்லாத நபர்களே அதிக அளவில் உரங்களை வாங்கி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக் கின்றனர். மேலும் அதிக அளவில் உரம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக