மேலபுலம் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் - ஒன்றிய குழு தலைவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி!
நெமிலி , அக்14
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேலபுலம் கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நெமிலி வட் டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார், மேலபுலம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் மேலபுலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக் கை மனுக்களை அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில், மேலபுலம் கிளை செய லாளர் விஜயன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி பார்த்திபன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மணிமேகலை லிங்கநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியர் விநாயகம், கிளை நிர்வாகிகள் பேரானந்தம், சத்யசீலன், ராஜமாணிக்கம், துரை,மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக