திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததானம் முகாம் !
குடியாத்தம் ,அக் 05 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீ திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப் போர் நலச்சங்கம், வேலூர் உதவும் உள்ளங்கள்- குடியாத்தம் கிளை மற்றும் குடியாத்தம் அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் APM மஹாலில் நடைபெற்றது. குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் மாறன் பாபு மற்றும் வழக்கறிஞர் ரஜினி தலைமை தாங்கினர்.சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் முகாமை துவங்கி வைத்து முதல் நபராக ரத்த தானம் செய்தார். நிகழ்ச்சியில் வேலூர் உதவும் உள்ளங்கள் நிறுவன தலைவர் சந்திரசேகர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் நகர மன்ற உறுப்பினர்கள் புவியரசி, கன்னிகா பரமேஸ்வரி, மற்றும் ராஜ கணபதி நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் தேவேந்திரன் குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.சந்திரன் முன்னாள் தலைவர் Rtn.வாசுதேவன், சமூக ஆர்வலர் சிவ கலைவாணன் மற்றும் குடியிருப் போர் நல சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் விஜய குமார் நன்றி தெரிவித்தார். குடியிருப் போர் நல சங்க செயலாளரும், வேலூர் உதவுங்கள் குடியாத்தம் பொறுப்பாளர் Rtn. பிரேம்குமார் முகாமை ஒருங்கி ணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக