குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட் பட்ட பத்தலபல்லி ஊராட்சி துவக்கப் பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை!
பேரணாம்பட்டு ,அக் 21 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி துவக்கப் பள்ளி மேம் பாட்டிற் காக ரூ.1 லட்சம் வழங்கிய தலை மை ஆசிரியருக்கு இந்தியன் செஞ்சிலு வைச் சங்கம் சார்பில் பாராட்டு விழா பேரணாம்பட்டு, தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் இயற்கை வள பேணல் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய தற்காக பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றி யத் துவக்கப்பள்ளி தலைமைஆசிரியரும் இந்தியன் செஞ்சிலுவைச் சங்க (Indian Red Cross Society) செயலாளருமான நல்லாசிரியர் பொன் வள்ளுவன் அவர்கள் “பசுமை முதன்மையாளர் – கிரீன் சாம்பியன்” விருது பெற்றார்.
பரிசுத்தொகை பள்ளி வளர்ச்சிக்காக
இந்த விருதுடன் கிடைத்த ரூபாய் 1,00,000/- பரிசுத்தொகையை தனக்காக பயன்படுத்தாமல், தாம் பணிபுரியும் பள்ளி மேம்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கிய “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்திற்கு அவர் வழங்கினார்.இந்த நிதி, பள்ளி மாணவர் கள் பயன்பெறும் கலையரங்கக் கட்டிட மேம்பாட்டிற்காக பயன்படுத்தப் படவுள் ளது.தன்னலமற்ற பணிக்கு பாராட்டு
இந்தச் செயல் “ஒரு ஆசிரியர் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம்” என்பதை உணர்த்துவதாகவும், கல்வியாளர் மனப்பான்மையின் உன்னதத்தைக் காட்டுவதாகவும், நிகழ்வில் கலந்து கொண்ட பேரணாம்பட்டு நகர்மன்றத் தலைவர் திருமதி பிரேமா வெற்றிவேல் பாராட்டுரை வழங்கினார்.செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா
இந்த தன்னலமற்றச் செயலைக் கௌரவிக்கும் வகையில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் வி.ஐ.பி. நகர் கொண்டம்பல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு சங்கத் தின் மேலாண்மை குழு உறுப்பினர் பொறியாளர் கோ. செல்வக்குமரன் அவர்கள் தலைமை தாங்கி, விழா ஏற்பாடு மற்றும் செலவுகளைத் தாமே ஏற்று சிறப்பாக நடத்தினார்.வரவேற்பு மற்றும் உரைகள் நிகழ்ச்சி தொடக்கத்தில் தலைமை ஆசிரியர் ம. பத்மநாபன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
அவர் உரையில்,பொன் வள்ளுவன் அவர்கள் மணவர்களுகாக தன் பரிசுத் தொகையை அர்ப்பணித்தது கல்வியா ளர் மனப்பான்மையின் உன்னதம்,”
எனக் கூறினார்.சிறப்பு விருந்தினர்கள்
பேரணாம்பட்டு நிலவள வங்கித் தலைவர் எல். சீனிவாசன், லயன்ஸ் சங்கத் தலைவர் திருமதி பரிதா, மேனாள் முதன்மைக் கல்வி அலுவலர் பெ. சுப்பிர மணி, கல்வியாளர் பெ. சௌந்தரபாண்டி யன், கணியம்பாடி வட்டாரக் கல்வி அலுவலர் ந.பா. கண்ணன், சாத்கர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சங்கீதா சீனிவாசன், இந்தியன் செஞ்சிலு வைச் சங்க பொருளாளர் பாங்கி நிஷார் அஹ்மத், தொண்டு நிறுவனர் லோகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து ரைகள் வழங்கினர்.அவர்கள் உரையில்,
பொன் வள்ளுவன் அவர்களின் கல்விச் சேவை, சமூக அக்கறை மற்றும் மனிதாபி மான உணர்வு — இன்றைய ஆசிரியர் களுக்குஒரு வழிகாட்டி,”எனக் குறிப்பிட் டனர் ஒருங்கிணைப்பு மற்றும் பங்கேற்பு
நிகழ்வை நல்லாசிரியர் இரா. கயிலை நாதன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
பள்ளி ஆசிரியர்கள், இந்தியன் செஞ் சிலுவைச் சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக