குடியாத்தம். சாலை அமைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு!
குடியாத்தம் , அக்.29-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்பாடி சாலையில் காந்திநகர் அருகே கோர்ட் எதிர்ப்புறம் சாலை உயரமாகவும் அதன் பக்கவாட்டில் பள்ளமாகவும் இருந்தது இதனால் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட இறங்கி ஏறும்போது சறுக்கி விழுந்து விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தது இதை அடுத்து சாலையின் பக்கவாட்டிலும் சாலை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் யூனியன் அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தனர் இதனை ஏற்று யூனியன் பொது நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் பக்கவாட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகி றது இந்தப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் சாலையை தரமாக அமைக்குமாறும் விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத் தினார் இந்த ஆய்வின் போது ஒப்பந்த தாரர் ராஜா மற்றும் ஓவர் சியர்கள் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக