பேர்ணாம்பட்டு பத்தலபல்லி சோதனை சாவடியில் கர்நாடக மது பாக்கெட்டுகள் ஹான்ஸ் மூட்டைகள் பறிமுதல்!
பேர்ணாம்பட்டு அக் 30 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பத்தலபல்லி சோதனை சாவடியில் கர்நாடக மது பாக்கெட்டுகள் ஹான்ஸ் மூட்டைகள் கடத்தி வந்த காரை துருத்தி பிடித்த போலிசார் பேரணாம்பட்டு பத்தல பல்லி சோதனை சாவடியில் கர்நாடக மது பாக்கெட்டுகள் ஹான்ஸ் மூட்டைகள் கடத்தி வந்த காரை துருத்தி பிடித்தபோலி சார், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி சோதனை சாவடி தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி அமைந் துள்ளது.இவ் வழியாக கர்நாடகாமாநிலத் திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள், கர்நாடக மது பாக்கெட்டுகள் காரில் கடத்துவதாக பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபுவுக்கு இன்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள் ளது. அதன் பெயரில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன தனிக்கையில் ஈடுபட்டனர் அப்பொழுது கர்நாடகா பதிவின் கொண்ட காரை நிற்க வைத்து சோதனை செய்த போது அதில் 10 மூட்டை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகியிலை பொருட் களான ஹான்ஸ் கூலிப் பான் மசாலா போன்றவை இருப்பதுதெரியவந்துள்ளது அதனை பறிமுதல் செய்து போலிசார் காரை ஓட்டி வந்தவரை விசாரித்த போது மொஹபூப் உசேன் (வயது 36) கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் காரின் உரிமையாளர் என்றும்தெரியவந்துள்ளது அதைத்தொடர்ந்து போலிசார் அரவாட்லா மலைப்பாதையின் வழியாக சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக கர் நாடக பதிவெண் கொண்ட ஒரு கார் அதிவேகமாக நிற்க்க வைக்காமல் சென்று உள்ளது அதனை பின்தொடர்ந்த இன்ஸ்பெக்டர் பிரபு சினிமா பாணியில் துருத்தி சென்று பிடித்ததில் காரை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி முயற்ச்சித்தில் இன்ஸ்பெக்டர் பிரபுக்கு லேசான காயங் கள் ஏற்பட்டுள்ளது பின்பு காரினை பத்தலபல்லி அடுக்கமாடி குடியிருப்பு அருகே பிடித்து காரினை சோதனை செய்த போது அதில் 3000 க்கும் மேற்பட்ட கர்நாடக மது பாக்கெட்டுகள் பெட்டிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.அதனை பறிமுதல் செய்த போலிசார் காரை ஓட்டி வந்த டிரைவரை விசாரணை செய்து போது கர்நாடக மாநிலம் முல்பாகால் பகுதியை சேர்ந்த பிர்சன்ன (வயது 36) என்பது தெரியவந்துள்ளது மேலும் இரண்டு கார்களையும் அதில் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடக மது பாக்கெட்டுகளை போலிசார் பறி முதல் செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக