ராமநாதபுரம் மாவட்டம்: ஏர்வாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் மற்றும் மண் கொள்ளைக்கு எதிராக, இன்று ஏர்வாடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அதிரடியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனுமதியின்றி மணல் மற்றும் மண் குவாரிகள் மூலம் கொள்ளை நடைபெறுவதாகவும், அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி, கிராம மக்கள் கொந்தளித்தனர்.
மக்களின் நலன் மற்றும் நிலத்தடி நீரைக் கருத்தில் கொண்டு, ஏர்வாடி மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் உள்ள அனைத்து மண் குவாரி அனுமதிகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மணல் கொள்ளையை எதிர்த்து ஏர்வாடி கிராம சபை எடுத்துள்ள இந்தத் தீர்க்கமான முடிவு, மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவாரி அனுமதிகள் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!
மேலும் இந்த கூட்டத்தில் கல்பார் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இரவு நேரங்களில் அப்பகுதி வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் தேசிய நெடுஞ்சாலையில் வேக தடை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் வைக்கப்பட்டது
ஏர்வாடி தர்காவில் உள்ள சர்வே எண் 502 504 தடை செய்யப்பட்ட பகுதியில் ஆவின் பாலகம் என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருவதால் அந்தக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது.
ஏர்வாடி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர் அதனால் ஏர்வாடி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கு டாக்டர்கள் அதிகரிக்க வேண்டும் என்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது.
கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் அசோக்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது ஏர்வாடி ஊராட்சி செயலாளர் செல்லத்துரை ஏர்வாடி காவல்துறை, மருத்துவ துறை ,ஏர்வாடி கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக