சேரன்மகாதேவியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், பேராசிரியர் ஒருவரை அங்கு பயிலும் மாணவர்கள் தாக்கியதாக காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலையில், அந்த நடவடிக்கைக்கு எதிராக SDPI மற்றும் SFI போன்ற அமைப்புகளின் சார்பாக, சமூக வலைதளங்களில் காவல்துறை மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்டதாக தவறான செய்திகள் பரப்பி வரும் செய்திகளுக்கு மறுப்பு மற்றும் விளக்க அறிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பேராசிரியர் ஒருவரை அங்கு பயிலும்
மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வைத்து கடந்த (09.10.2025) அன்று தாக்கியதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்று, அதன் அடிப்படையில், மேற்படி சம்பவத்திற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து,
வழக்கின் புலன் விசாரணையில், மாணவர்கள் பேராசிரியரை தாக்கியது உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய அக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து , சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் , மேற்படி காயம்பட்ட பேராசிரியர் கடந்த வாரத்தில், கேரள மாநிலம் கொச்சிக்கு, மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்வி சுற்றுலா சென்ற போது, கல்லூரி மாணவி ஒருவரிடம், தொந்தரவு செய்ததாக மாணவர்கள் தரப்பில் மேற்படி பேராசிரியர் மீது அதிருப்தியில் இருந்து வருவதாக பரவலாக தெரிய வருகிறது.
இது சம்பந்தமாக, மேற்படி மாணவியை அவரது பெற்றோர் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்ததில் , அம்மாணவி அது போன்று எந்த ஒரு தொந்தரவும் தனக்கு நடைபெறவில்லை என்றும், இது சம்பந்தமாக தான் புகார் ஏதும் அளிக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தரப்பிலிருந்து, மேற்படி பேராசிரியர் மீது இதுவரையில் எந்த ஒரு புகார் மனுவும், தகவலும் கிடைக்கப் பெறாத சூழலில், காவல்துறை மேற்படி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வருவது, தவறான செயலாகும்.
இது போன்று அடிப்படை ஆதாரம் அற்ற, செய்தியை காவல்துறைக்கு எதிராக பொது வெளியில் பரப்பி வருவது சட்டத்திற்கு விரோதமான செயலாகும்.
ஆகவே சமூகப் பொறுப்புடன் செயல்படும் கட்சிகள், இது போன்ற போலியான செய்திகளை பரப்பாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், SDPI அமைப்பின் சார்பில் பரவி வரும் செய்தியில், காவல்துறைக்கு எதிராக அவதூறை பரப்பும் வண்ணம் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது சட்டத்திற்கு விரோதமான செயலாகும், இது போன்ற செயல்கள் சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என திருநெல்வேேலி மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் தங்கராஜ் திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக