காட்பாடி ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்டம் துளிர் திறனறிதல் தேர்வு பதாகை வெளியீடு!
காட்பாடி ,அக் 5 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி ஒன்றிய கிளை யின் கூட்டத்தில் துளிர் திறனறிதல் தேர் விற்கான பாதகைகள் வெளியிடப்பட்டன
காட்பாடி ஒன்றிய கிளைக்கான ஆலோச னைக்கூட்டம் காட்பாடி சேவகன் அறக் கட்டளை அலுவலகத்தில் ஒன்றிய தலை வர் ஆர்.சுதாகர் தலைமையில் நடைபெற் றது. கிளை செயலாளர் ஆர்.ராதாகிருஷ் ணன் வரவேற்று பேசினார். வேலூர் மாவட்ட செயலாளர்செ.நா.ஜனார்த்தனன் துளிர் திறனறிதல் தேர்வுக்கான பதாகை களை வெளியிட்டு பேசினார்.மாவட்ட துணைத் தலைவர் கே.விஸ்வநாதன் துளிர் வினாடி வினா போட்டிகள் நடத்து வது கறித்து விளக்கி பேசினார். இணை செயலாளர் எஸ்.சுரேஷ், உறுப்பினர்கள் கே.சோகாராமன், டி.திலகர், வி.திவ்யா, ஆகியோர் பேசினர்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1.துளிர் வினாடி வினா போட்டிகளை ஒன்றிய அளவில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு குழுவாகவும் 9 மற்றம் 10 வகுப்பு ஒரு குழுவாகவும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு குழுவாகவும் என மூன்று குழுக்கள் போட்டியினை காட்பாடியில் 09.10.2025 வியாழக்கிழமை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
2.துளிர் திறனறிதல் தேர்வு 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இயற்பியல், வேதியில், உயிரியில், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில் நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் தேர்வுகள் நடைபெற உள்ளது.
3.நவம்பர் மாதம் வேலூரில் நடைபெற உள்ள 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் காட்பாடி ஒன்றியதிலிருந்து ஆய்வறிக்கை சமர்பிக்க ஊக்கப்படுத் துவது.
கிளை பொருளாளர் எம்.ஈஸ்வரி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக