இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 அக்டோபர், 2025

இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை.

இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS, நிமிர் (The Rising Team)

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக நிமிர் குழுவிற்கு தகவல் கிடைத்தது. 

உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு வாழ விருப்பமில்லை என்றும் அதனால் இரண்டு குழந்தைகளுடன் சாகப் போகிறேன் என்றும் கூறியுள்ளார்.

அவருக்கு சிறந்த முறையில் கவுன்சிலிங் வழங்கப்பட்டு நம்பிக்கையும் தைரியமும் கொடுத்து, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண உதவி செய்வோம் என உறுதி அளித்து நிமிர் குழுவினர் அனுப்பி வைத்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad