இராமநாதபுரம் மாவட்டம்
ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையின் செயலாளராக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிமன்ற ஆணையர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு செயல்பட்ட PS.சித்திக் லெவ்வை, கடந்த 16.10.2025 அன்று காலமானார்
தொடர்ந்து ஏர்வாடி தர்ஹா நிர்வாகத்தின் சமரச திட்ட விதிகளுக்கு இணங்க நிர்வாக சபைக்கான உறுப்பினரை தேர்ந்தெடுக்க மூன்றாம் கிளை அங்கத்தினர் மூலம் பொதுக்குழு கூட்டப்பட்டு PSS ஜாஹிர் ஹுஸைன் லெவ்வை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையின் உறுப்பினராக போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து மூன்றாம் கிளை நிர்வாக சபை உறுப்பினர்களால் PSS ஜாஹிர் ஹுஸைன் லெவ்வை செயலாளராக போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
PSS ஜாஹிர் ஹுஸைன் இராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி மௌலானா மௌலவி V V A ஸலாஹுதீன் பாசில் உமரி அனைத்து ஹக்தர்களின் முன்னிலையில் தர்ஹா ஷரீஃபில் பதவி ஏற்பு நிகழ்வு நிறைவேற்றப்பட்ட பின்னர் செயலாளராக PSS ஜாஹிர் ஹுஸைன் லெவ்வை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக