ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ஏரான் துறை கிராமத்தில் நிலத்தடிநீரை ஆல் கிணறு அமைத்து அதில் தண்ணீரை எடுத்து வீடு கட்டுவதற்கும் கடைகளுக்கு தண்ணீரை வியாபாரம் செய்து வருகின்றனர்
ஏறான் கிராமத்தில் அப்படி வியாபாரம் செய்யும் பட்சத்தில் கிராமத்தில் நிலத்தடி நீர் அழிந்து வருவதாகவும் இதனை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த கிராமம் தண்ணீர் இல்லாத கிராமமாக மாறி வரும் சூழல் உள்ளது.
எனவே அப்பகுதி கிராம மக்கள் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் எடுத்து வியாபாரம் செய்யும் நபர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் இது குறித்து தாசில்தாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிய வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக