2021-2022 ஆம் ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி வாரச்சந்தை அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துச்சாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார், கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்கள்.
இப்பகுதியில் அமைய உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள விளையாட்டுகள் உட்பட குறைந்தபட்சம் ஐந்து முக்கிய விளையாட்டுகளுக்கான வசதிகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவ மாணவியர்கள் விளையாட்டுத்துறையில் மேலும் உயரம் நோக்கி செல்ல ஊக்கமாக இருக்கும். மேலும் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தல் கிராமப்புறங்களில் உள்ள திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாநில - தேசிய அளவிலான வாய்ப்புகளை உருவாக்கவும் முக்கிய பங்களிப்பாக அமையும்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக