நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் (Petition Mela) 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் (Petition Mela) 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் (Petition Mela) 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.
                                                                                 நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களை தீர்க்கும் நோக்கில் நேற்று வடசேரி குடுமிசாலியர் சமூக நலக்கூடத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இம்முகாம் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார. தலைமையில் நடைபெற்றது. இதில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர், ஆசாரிப்பள்ளம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றது.  

இந்த சிறப்பு முகாமில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களால் மொத்தம் 62 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. 
மேலும், நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெறப்படும் மனுக்கள் சம்மந்தமாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், முகாம்கள் நடத்தப்பட்டும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 3450 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் முயற்சிகளில், நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காட்டும் மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad