திருநெல்வேலி - தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு சப் ஜூனியர் U17 இறகுபந்து சாம்பியன்ஷிப் 2025 தொடக்க விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

திருநெல்வேலி - தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு சப் ஜூனியர் U17 இறகுபந்து சாம்பியன்ஷிப் 2025 தொடக்க விழா

திருநெல்வேலி மாவட்ட இறகு பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு சப் ஜூனியர் U17 இறகுபந்து சாம்பியன்ஷிப் 2025 தொடக்க விழா முதல் நடைபெறுகிறது 

திருநெல்வேலி மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தில் செயல்பட்டு வரும் நெல்லை பேட்மிட்டன் அகாடமி, டார்லிங் நகர் பாளையம் கோட்டை, இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் உலகத் தரம் வாய்ந்த 14 கலைநயம் மிக்க ஆடுகளங்கள் நிறுவப்பட்டு உள்ளது .

இந்த உள் விளையாட்டு அரங்கம் உலக இறகுப்பந்து கூட்டமைப்பின்(BWF) தரத்திற்கு ஏற்ப நிறுவப்பட்டுள்ளது. இந்த உள்விளையாட்டு அரங்கம் தமிழ்நாட்டிலேயே அதிக ஆடுகளங்கள் உள்ள உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெல்லை பேட்மிட்டன் அகாடமி உள் விளையாட்டு அரங்கம் நெல்லை மாவட்டத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும் .
இந்த சப் ஜூனியர் U/17 சாம்பியன்ஷிப் போட்டிக்கு 700 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஐந்து வெவ்வேறு வகையான போட்டி நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாபெரும் போட்டியை திருநெல்வேலி மாவட்ட இறகு பந்து கழக தலைவர் மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் மருத்துவர் D.லயனல் ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். N.கவிதா IRS
இணை கமிஷனர் மத்திய ஜிஎஸ்டி துவக்கி வைத்தார்கள். கிருஷ்ணா சக்கரவர்த்தி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அவர்கள் தலைமை தாங்கினார். பிரதீப் அவர்கள் தமிழ்நாடு இறகு பந்து கழக செயற்குழு உறுப்பினர் முன்னிலை வகித்தார். ரவீந்திரன் திருநெல்வேலி மாவட்ட இறகு பந்து கழக செயலாளர் நன்றியுரை வழங்கினார் .

இந்த மாபெரும் விளையாட்டுப்போட்டி அக்டோபர் 4 முதல 9 வரை நடைபெறும். இந்தப் போட்டியை பல்வேறு வகையான விளையாட்டு ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நெல்லை பேட்மிட்டன் அகாடமியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad