திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் காக்கங்கரை ஊராட்சியில் நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் !
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியில் உள்ளாட்சி தினத்தை முன்னி ட்டு கிராம சபை கூட்டம்! லிஸ்ட் உடன் வந்து பல்வேறு கேள்விகளால் அதிகாரி களை துவைத்து எடுத்த நபர்! பதில் சொல்ல முடியாமல் இரண்டு அதிகாரி களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு! நான் இப்பதான் வந்தேன் எனக்கு எதுவும் தெரியாது வேணும்னா கிராம சபாவை நீங்க நடத்துங்க அதுக்குள்ள போயிட்டு எடுத்துட்டு வரேன் கிளருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறல் திருப்பத் தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் காக்கங் கரை ஊராட்சியில் நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.கிராமசபை கூட்டத் தில் ஊர் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பஞ்சாயத்து கிளார்க்சுவினிடம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பல்வேறு கேள்விகள் அடங்கிய லிஸ்ட்டுடன் வந்து பல கேள்விகளைக் கேட்டு துவைத்து எடுத்தார். அப்போது காக்கங்கரை ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் எவ்வளவு, அது என்ன செய்தீர் கள் மேலும் அப்பகுதிக்கு வாங்கப்பட்ட பொருட்கள் மதிப்பு என்ன புதிய பொருட் கள் வாங்கப்பட்டிருந்தால் பழைய பொருட்களை என்ன செய்தீர்கள் என பல்வேறு கேள்விகளை எழுப்பிதுவைத்து எடுத்தார்.இதனால் இதற்கு பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.
இதனால் ஆத்திரமடைந்த துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு பஞ்சாயத்து கிளர்க்கை பார்த்து ஏங்க அவங்க கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க அதை விட்டுட்டு வேற ஏதோ பேசிட்டு இருக்கீங்க என ஆத்திரமடைந் தார். இதனால் பஞ்சாயத்து கிளர்க்கு நான் இப்பதான் வந்தேன் எனக்கு எதுவும் தெரியாது. முன்னாள் இருந்த கிளர்க் என்னிடம் எதுவும் சொல்லல பீடியோவும் எதுவும் சொல்லல எனக் கூறி மேலும் ஆத்திரமடை செய்தார்.இதனால் கிளர்க் மற்றும் ஜோனல் டெப்த் பீடியோ இருவரு க்கும் இடையே லேசான வாய் தகறாரு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் அனை வரும் செய்வது அறியாமல் கப்சுப் ஆகினர்.அதன்பின்பு கிளர்க் எனவிடுங்க எல்லாம் ஆவணமும் அலுவலகத்தில் உள்ளது எனவே அங்கு சென்று இருக்கும் ஆவணங்களை எடுத்து வருகிறேன் அதுவரை நீங்க கிராம சபை நடத்துங்க என அதிகாரியை பார்த்து பேசினார்.
இருந்த போதிலும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் கிராம சபை கூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய நிலையில் இரண்டு நாட்கள் டைம் கொடுங்க ரிட்ட ன்ல கொடுக்கிறேன் என அதிகாரிகள் கூறினர்.இதனார் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது..
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக