குமரி:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 நவம்பர், 2025

குமரி:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா.

குமரி:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா மற்றும் 14 வது மனமகிழ் மன்ற ஆண்டு விழா இன்று தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது-இதில் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் மேலும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த வருவாய் துறை குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு  ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் பேசுகையில்"மாணவர்கள் கல்வி பாடம் மட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த வரலாறு சார்ந்த புத்தகங்களையும் படித்து தன்னம்பிக்கையும் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் சமூக வலைதளங்கள் மூலம் பயனுள்ளதை மற்றும் கற்றுக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனவும் சிறப்புரையாற்றினார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad