அரக்கோணம் முழுவதும் ஆங்காங்கே போராடுவாராம்.கருத்து கேட்புக் கூட்டத் தில் வெளிப்படையாக மிரட்டிய அதிமுக
எம்.எல்.ஏ.!
அரக்கோணம் , நவ 2 --
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத் தில் ரயில்வே விரிவாக்க திட்டப் பணி களுக்கு அதிமுக எம்எல்ஏ சு.ரவி என்பவர் முட்டுக்கட்டை போடுவதாகவும், கழிவறை கூட இல்லை எனவும் ரயில் பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு.அம்ரித் பாரத் திட்ட ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் எட்டு மாதத்திற்குள் நிறைவடையும் என ரயில்வே அதிகாரி தகவல் ராணிப் பேட் டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப்பணி கள் முடிவடைந்து இருக்க வேண்டிய நிலையில் இன்னும் முடிவடையாமல் காலம் தாழ்த்தி நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இதை தொடர்ந்து ரயில்வே துறை தரப்பில் கருத்து விளக்க கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவிஉள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக் களை தெரிவித்தனர்.இதில் அரக் கோணம் கைனுர் கிராமத்திற்கு செல்லும் சுரங்கப்பாதை பணிகள் கடந்த 3 ஆண்டுகாலம் முடிவடையாமல் இருப்பதால் கிராம பொதுமக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் என கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.ரயில் நிலைய நடைமேடை வரும் மின்சார ரயில்கள் குறிப்பிட்ட நடைபாதைக்கு வரும் மின்சார ரயில்களை பயண சீட்டு வழங்கும் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள நடை பாதை மேம்பாலங்களுக்கு அருகே ரயில்களை நிறுத்தாமல், பயணிச்சிட்டு அலுவலகத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நடை மேடைகளுக்கு ரயில்களை நிறுத்துவ தால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள், அலுவலகங் களுக்கு செல்பவர்கள் என அனைத்து ரயில் பயணிகளுக்கும் இன்னல்களை ஏற்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வா கம் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தனர்.அதை தொடர் ந்து ரயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி ரயில் நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை, குறிப்பாக கழிவறை வசதி கூட இந்த ரயில் நிலையத்தில் ஏதுவாக இல்லை, அதிக குற்றச்சாட்டுகள் உள்ள அரக் கோணம் ரயில் நிலைய விரிவாக்க பணிகளை நிறைந்து முடிக்க வேண்டும்.
விரிவாக்கம் குறித்து பொதுமக்களுக்கு ஏதுவான தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.இதைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி திட்ட பணியின் காரணமாக அரக்கோணம் இரட்டைக் கண் சுரங்கப்பாதை வரும் நவம்பர் மாதம் 2 தேதி முதல் 11 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி பங்கேற்று பேசுகை யில் ரயில்வே இரட்டைக் கண் சுரங்கப் பாதை காஞ்சிபுரம் திருப்பதிக்கு இடை யிலான பேருந்து பாதியாக இந்த பாதை திகழ்ந்ததாகவும் காலப்போக்கில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கனரக வாகனங்களுக்கு அரக்கோணத் தில் புறவழிச் சாலை உள்ளது.
எந்த சுரங்கப்பாதை வழியாக தற்போது நான்கு சக்கர வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.எனவே பாலத்தை சுரங்கப் பாதையை அகலப்படுத்த வேண்டும் அல்லது மேம்பாலமாவது ஏற்படுத்தி தர வேண்டுமென பலமுறை ரயில்வே சென்னை கோட்டை மேலாளர் அவர்களு க்கு கடிதம் வாங்கலாகவும் தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை வைத்தேன் எதற்கும் செவி சாய்க்கவில்லை என குற்றம் சாட்டினார்.ஆனால் தற்பொழுது சுரங்கப்பாதை மூடப்பட்டு ரயில் தண்டவாளங்கள் விரிவு படுத்துவதற்காக பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற் கொள்ள உள்ளது அதற்கு முன்பு தான் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற 2 ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுமக்களை திரட்டி மறியல் போராட் டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.
அதுவும் என்ன மாதிரியான போராட்டம் செய்வார் என்று சொல்லமாட்டாராம், அரக்கோணம் முழுவதும் ஆங்காங்கே போராடுவாராம்.கருத்து கேட்புக் கூட்டத் தில் ரவி வெளிப்படையாக மிரட்டி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இதற்கு ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கையில், வளர்ச்சி திட்ட பணி கள் நடைபெறும் போது, ஒரு சட்டமன்ற உறுப்பினரே இதுபோன்று மிரட்டுவதும், வளர்ச்சி திட்ட பணிக்கு முட்டுக்கட்டை போடுவது பெரும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ரயில்வே சென்னை உதவி கோட்ட மேலாளர் பேசுகையில் அம்ரித் பாரத் விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது. இப்பணி இன்னும் 8 மாதத்திற்குள் நிறைவடைய வாய்ப்பு இருப்பதாகவும், பொது மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் விரைவில் செய்து தர நடவடிக் கை எடுக்கப்படும் என சொன்னார்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக