கன்னியாகுமரி மாவட்டம் - இரணியல் : வடக்கு பேயன்குழியை சேர்ந்த ராஜன் (55) இவர் மீது சில வழக்குகள் ஏற்கனவே உள்ள நிலையில்,
நேற்று இரவு தனது அண்ணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாகவும், இதில் அவரது அண்ணன், ராஜனை கட்டையால் அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு,
தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம்
மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.
இது வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக