கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு பங்கு தந்தை இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி
கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டதுஇதையொட்டி கல்லறைத் தோட்டங்களில் உள்ள முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முன்னோர்கள் நினைவாகவும் அவர்களின் ஆத்மா சாந்தி பெறவும் உறவினர்கள் பிரார்த்தனை செய்தனர். கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் பூக்களை கொண்டு கல்லறையை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தியும், அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை படைத்தும் குடும்பத்துடன் பிரார்த்தனை நடத்தினர். கல்லறை திருநாளையொட்டி பரமன்குறிச்சி சிங்கராயர்புரத்தில் பங்கு தந்தை இருதயராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக