பச்சூர் பகுதியில் 10 கோடி மதிப்பில்புதிய ஐ.டி.ஐ கல்லூரி கலெக்டர், எம்.எல்.ஏ பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர்!.
நாட்றம்பள்ளி ,நவ 11 -
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்காவில் உள்ள மாணவர்கள் ஐ.டி.ஐ படிக்க அண்டை மாவட்டத்திற்கு சென்று வந்த நிலையில் 2025 - 2026 கல்வி ஆண்டில் ஐ.டி.ஐ கல்லூரி செயல்படும் என்று அரசு தரப்பில் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற் காலி கமாக நாட்றம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி இயங்கி வரும் நிலையில் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐ.டி.ஐ கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். அப்போது தேர்தலுக்குள் கட்டிட பணி முடிக்க வேண்டும் என்று வெண்டிகொள்ளுங்கள் என்று அதிகாரி களிடம் கோரிக்கை வைத்தார். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சிங்காரவேலன். நாட்றம்பள்ளி சேர்மன் வெண்மதி முனுசாமி. கார்த்தி அருள்நிதி. தகவல் தொழில்நுட்பு ஏராளமான அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக