தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், பிரகாசபுரம் கிளையில் 104ம் ஆண்டு தொடக்க நாள் நிகழ்வு கொண்டாடப்படது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 1921ம் ஆண்டு இதே நாளில் சன்றோர்குல மக்களால் தொடங்கப்பட்டு இன்று 2025 நவம்பர் 11, 104 ம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது.
நாசரேத் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவரும் மூ.பி. இந்திய ஏக இரட்சகர் சபையின் செயலாளருமான குரு. மத்தேயு ஜெபசிங் மற்றும் காமாட்சி டிம்பர் டிப்போ உரிமையாளர் மேகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் வங்கிகள் வரலாறு, சேவைகள் பற்றி உரையாற்றினார்கள். கிளை மேலாளர் விக்னேஷ் கண்ணன் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நாசரேத் பிரகாசபுரம் கிளை மேலாளர் விக்னேஷ் கண்ணன் துணை மேலாளர்கள் ஆனந்த பாலாஜி, ஜெகன் மனோவாமற்றும் வங்கி ஊழியர்கள் தங்க விக்னேஷ்,, மகேந்திரன், ராம்ஜி, அரவிந்த், ஜோசப், அப்பாதுரை, மதியழகன், சுரேஷ், மூர்த்தி, பொன்மாரி, தாரணி உள்ளிட்டோர் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக