தூத்துக்குடி - இதுவரை 122 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

தூத்துக்குடி - இதுவரை 122 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 நபர்கள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு - இந்த ஆண்டு இதுவரை 122 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 13.10.2025 அன்று தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்வின் தங்கராஜ் மகன் ஜேம்ஸ் செல்லதுரை (25) என்பவரையும், அதேபோன்று கடந்த 11.10.2025 அன்று ஆத்தூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி தெற்கு கோவன்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ்குமார் (25) மற்றும் தூத்துக்குடி சேர்வைக்காரன் மடம் பகுதியை சேர்ந்த தெய்வமுத்து மகன் பாலமுகேஷ்(20) ஆகிய 3 நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (12.11.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை 122 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்.மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad