கொடிகாத்த குமரன் திருவுருவச் சிலை அமைக்கக் கோரி D.M கதிர் ஆனந்த் M P பொதுமக்கள் சார்பில் மனு!
குடியாத்தம் ,நவ 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் அவர்களின் திருவுருவச் சிலை அமைத்து திருப்பூர் குமரன் அவர்களின் தியாக வாழ்வை இளைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ளும் வகையிலும், நாடு சுதந்திரம் பெற்றபோது முதன் முதலில் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய தேசியக் கொடியை தயாரித்து அனுப்பி வைத்த குடியாத்தம் நெசவாளர்களை பெருமைப் படுத்தும் விதமாக இச்சிலையை அமை த்து தருமாறு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் அவர் களை சந்தித்து, வேலூர் மாவட்ட கொடி காத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் மாவட்ட அவைத் தலைவர் ப.ஜீவானந்தம் மாவட்ட பொதுச்செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி,பொருளாளர் கோ.ஜெயவேலு, துணைத் தலைவர் மா.கோ.ஞானசேகர் ஆகியோர் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கொடிகாத்த குமரன் அவர்களின் சிலையை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக