வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் நவம்பர்-18ல் அடையாள வேலை நிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் நவம்பர்-18ல் அடையாள வேலை நிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் நவம்பர்-18ல் அடையாள வேலை நிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!
காட்பாடி ,நவ 10 -
வேலூர் மாவட்டம் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும்நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்றிட கோரி 18.11.2025ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க கோரி பிரச்சார இயக்கம் இன்று வேலூர் மாவட்டத்தில் தொடங்கியது.வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் உணவு இடை வேளையின் போது ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப் பாளர் மற்றும் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அ.மாயவன் தலைமையில்  மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் மாவட்ட உயர்மட்டக்குழுவின்  மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெய காந்தன், ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், ஆகியோர் முன்னிலை யில் பிரச்சார இயக்கம் தொடங்கியது.
இந்த நிகழ்வில் உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் வரவேற்று பேசினார்.  தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அக்ரி. இராமன், ஜி.கோபி, துரை.கருணாநிதி, மாவட்ட உயர்மட்டக்குழு நிர்வாகிகள் எம்.எஸ்.செல்வகுமார், வாரா, ஆர்.ஜெயக் குமார், ஜி.டி.பாபு, உள்ளிட்டோர் கோரிக் களை விளக்கி பேசினர்.
கோரிக்கைகள்
1.பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத் தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகப் பணியேற்ற ஆசிரிர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத் தலில் இருந்து டெட் தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாது காத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் 
3.காலவரையின்றி முடக்கி வைக்கப் பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம்.
4.இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர் நிலைப்பள்ளித்தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
5.முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறை களிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள்,  ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.  கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடி யாக வழங்கிட வேண்டும்.  மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.
6.சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.  மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை யில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
7.அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக் காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.
8.21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்குமறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்
9.2003 முதல் 2005 வரை தொகுப்பூதியத் தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
10.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு அணுகவும் 9843264123

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad