அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் பயிற்சி திட்டம் வேலூரில் மாவட்டக்கல்வி அலுவலர் பி.செந்தில் குமார் தொடக்கம்!
வேலூர் மாவட்டம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் பயிற்சி திட்டம் வேலூரில் மாவட்டக்கல்வி அலுவலர் பி.செந்தில் குமார் தொடக்கி வைத்தார் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும் யுனிசெப் நிறுவனமும், மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ ர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் குறித்த செறிவூட்டல் ( Science, Technology, Engineering, and Mathematics - STEM) திட்டத்தை செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளுர், வேலூர் மற்றும் இராணிப் பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைமுறைபடுத்தபடுகிறது. வேலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி இன்று 10.11.2025 காட்பாடி காந்திநகரில் அமைந் துள்ள வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட கூட்ட அரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் அ.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர்செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்கள் வழிகாட்டுதல் படி மாவட்டக்கல்வி அலுவலர் இடை நிலைக்கல்வி பி.செந்தில்குமார் ஆய்வக பரிசோதனை பெட்டககங்களை வழங்கி பயிற்சியினை தொடக்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீட்டுக்குழு ஒருங்கி ணைப்பாளர் ச.சுப்பிரமணி, திட்ட செயல்பாடுகளை செயல் விளக்கம் அளித்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கே.விசுவநாதன், காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர், செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் துளிர் வினாடி வினா மாவட்ட இணை அமைப்பாளர் சுகுமார், பயிற்சி கருத்தாளர்கள் பி.ரவீந்திரன், பி.பிரகாஷ் எஸ்.அருண் குமார், எ.அனிதா ஆகியோர் பயிற்சி களை ஒருங்கிணைத்தனர்.பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறிவியல், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் குறித்த செறிவூட் டல் பெட்டகத்தினை வழங்கி பயிற்சி அளித்தனர்.பெட்டகத்தில் உள்ள உபகர ணங்களை கொண்டு அறிவியல் பரி சோதனைகளை செய்து காண்பித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்த உபகர ணங்களை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. ஆசிரியர்களும் உற்சாகமாக பயிற்சி களை செய்து விளக்கம் பெற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக