.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
ராணிப்பேட்டை ,நவ 10 -
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (ஜெய்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். அதில், தமிழ்நாட்டில் அரசு மணல் குவாரிகள் மீண்டும் திறக் கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். மணல் பற்றாக்குறையால் “கலைஞர் கனவு இல்லத் திட்டம்” உள்ளிட்ட பல் வேறு கட்டுமானப் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன என்றும், M-Sand உற்பத்தி அதிக எரிபொருள், மின்சாரம் தேவைப் படுவதால் காற்று மாசு மற்றும் நோய்கள் அதிகரிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
மணல் குவாரி மூடப்பட்டதால் 25 ஆயிரம் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக குவாரிகளைத் திறக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப் பட்டுள்ளது .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும்
📲9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக