அன்புச் சோலை மூத்த குடிமக்கள் பகல் நேர பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர், மற்றும் எம்எல்ஏ ,கலெக்டர் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , நவ 10 -
ராணிப்பேட்டை மாவட்டம் அன்புச் சோலை மூத்த குடிமக்கள் பகல்நேர பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர் காந்தி, மற்றும் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.11.2025) ராணிப்பேட்டை, பாரதிநகர், சம்பந்தனார் தெருவில் சமூக
நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவியுடன் Cheyyar God Trust நடத்தும் அன்புச் சோலை மூத்த குடிமக்கள் பகல் நேர பராமரிப்பு மையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பராமரிப்பு மையத்தில் முதியோர்களுடன் இணை ந்து குத்து விளக்கேற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.
ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்
பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழுத் தலைவர் வெங்கட்ரமணன், மாவட்ட சமூகநலன் அலுவலர் பாலசரஸ்வதி. ஒன்றிய குழு துணைத் தலைவர்
இராதாகிருஷ்ணன். Cheyyar God Trust நிறுவனர் ஸ்ரீதர் மற்றும் பலர் உள்ளனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக