ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன் முறையாக நெமிலி ஊராட்சி ஒன்றியத் தில் ஆதார் சேவை மையம் திறப்பு விழா!
சேர்மன் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார்!!
ராணிப்பேட்டை, நவ10 -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன் முறையாக நெமிலி ஊராட்சி ஒன்றியத் தில் ஆதார் சேவை மையம் திறப்பு விழா!
நெமிலி ஒன்றிய குழு தலைவர் குத்து விளக்கு ஏற்றி இனிப்பு வழங்கினார் தனி மனிதனின் அடையாளமாக ஆதார் விளங்கி வருகி றது எந்த ஒரு அரசு சேவை பெற வேண்டுமானாலும் அதற்கு ஆதார் அவசியமாகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் சார்பில் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகிறது. அதேபோன்று நகராட்சி அலுவலகங்க ளில் எல்காட் நிறுவனம் சார்பில் ஆதார் சேவை மையங்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழக முழுவதும் 50 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆதார் சேவை மையத்தை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து ராணிப் பேட்டை மாவட்டத்தில் முதன்முறையாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது இந்த சேவை மையத் தை அமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நெமிலி ஒன்றியகுழு தலைவர் வடிவேலு குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆதார் சேவை மையம் குறித்து நெமிலி ஒன்றியகுழு தலைவர் வடிவேலு கூறியதாவது இந்த ஆதார் சேவை மையத்தில் புதிய ஆதார் பதிவுக்கு கட்டணம் இல்லை. இலவசமாக புதிய ஆதார் பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோன்று 5 முதல் 17 வயதுக்கான கட்டாய கருவிழி, கைரேகை பதிவு, ஆதார் நிலை அறிதல் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் பெயர், பிறந்த தேதி, இனம், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் மாற்றம் ஆகியவற்றுக்கு ரூபாய் 75 கட்டணமாக செலுத்த வேண்டும்.புகைப்படம் ,கைரேகை, கருவிழி புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு ரூபாய் 125 கட்டணமாக செலுத்த வேண்டும் ஆதாரில் ஆவணங்களை புதுப்பிக்க ரூபாய் 75 கட்டணமாக செலுத்த வேண்டும் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட மக்கள் மட்டுமின்றி இராணிப் பேட்டை மாவட்டத்தில் எந்த ஊரில் வசிக்கும் மக்கள் வேண்டுமானாலும் வந்து பயன்பெறலாம் என்பது சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், துறையூர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், முகமது அப்துல் ரகுமான், புருஷோத் தமன் ஆகியோர் உடனிருந்தனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக