விசிக - வினர் பொய் பிசிஆர் வழக்குகள் போடுவதாக கூறி, அதனை கண்டித்து நவ., 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

விசிக - வினர் பொய் பிசிஆர் வழக்குகள் போடுவதாக கூறி, அதனை கண்டித்து நவ., 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் விசி., கட்சியினர் பொய் பிசிஆர் வழக்குகள் போடுவதாக கூறி, அதனை கண்டித்து நவ., 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அனைத்து சமுதாய மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தினர் அறிவிப்பு.

திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காமராசு தலைமை வகித்தார். 

முன்னாள் ஆலந்தலை ஊர் கமிட்டி தலைவர் பாரிஸ் திருச்செந்தூர் திரிசுதந்திர கைங்கர்ய சபா தலைவர் ஆனந்த், திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் ஊர் தலைவர் சுடலை, மேலத்தெரு யாதவ சபை தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தூத்துக்குடி தென் மாவட்ட பகுதிகளான திருவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம். உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் விசிகவினர் பொய் பிசிஆர் வழக்குகளை தொடர்வதாகவும், அவர்களை கண்டித்து திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு நவ., 20ம் மாலை 5 மணிக்கு அனைத்து சமுதாய மக்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், 

இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்படும் தவறு செய்யாத அப்பாவி தலித் அல்லாத பொதுமக்களான வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாய பெருமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அனைத்து சமுதாய மக்கள் விழிப்புணர்வு இயக்கம் துவங்குவது எனவும், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அளவில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க மாநில கூடுதல் செயலாளர் யாபேஷ், மண்டலத் தலைவர் வேலாயுதபெருமாள், நாடார் உறவின் முறை சங்க பால்வண்ணன், விநியோகஸ்தர் சங்க செயலாளர் நம்பியாதவ், ரெட்டி ஜன சங்க நிர்வாகி முருகன், சைவ வேளாளர் சங்க நிர்வாகி சங்கர், பண்ணையார் சமுதாய நிர்வாகிகள் கந்தன், கிருஷ்ணமூர்த்தி, நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செல்வின், 

திருச்செந்தூர் மேல நாடார் தெரு காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் மோகன், தளவாய்புரம் ஜெயமுருகன், மத்திமான்நகர் ஜெயராமன், சண்முகபுரம் பிச்சை, நஜீம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர் முடிவில் நாடார் வியாபாரிகள் சங்க நிர்வாகி பார்த்திபன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad