சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கைது.

சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காமராஜர் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 

உத்தரவின் படி குளச்சல் காவல் நிலைய போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் குளச்சல் மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து டிரைவர், ஜவகர் (55) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad