தி மு க வேலூர் வடக்கு மாவட்ட பொறுப் பாளராக டி எம் கதிர் ஆனந்த் நியமனம்! மக்கள் பெரு மகிழ்ச்சி உற்சாக வரவேற்பு!
காட்பாடி , நவ 6 -
வேலூர் மாவட்டம் இன்று 06-11-2025, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் அவர்கள் ஒப்புதலுடன் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP அவர்களை நியமிக்கப்பட்ட தைத் தொடர்ந்து கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டான் துளசி, இலத்தேரி, வடுகந்தாங்கள், கே.வி.குப்பம் பகுதியில் உள்ள ஒன்றிய கழக செயலா ளர்கள், கழக நிர்வாகிகள் உற்சாக வர வேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, கே.வி .குப்பம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணி வித்து மரியாதை செய்து திரளான கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்பு கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபடுவேன் என்றும் வருகின்ற தேர்தலுக்கு முழு பங்களிப்பு தருவேன் என்று தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக