ஐப்பசி மாத அன்ன பிரசாத பிரதோஷ வழிபாடு இறைஞானத் தத்துவக் குரு ஜம்புதாச அடிகளார் பங்கேற்பு !
திருப்பத்தூர் , நவ 6 -
திருப்பத்தூர் மாவட்டம் மத்தூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் இன்று மாலை நடைபெற்ற ஐப்பசி மாத அன்ன பிரசாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.இந்நிகழ்வில் இறைஞானத் தத்துவக் குரு ஜம்புதாச அடிகளார் அவர்கள் கலந்து கொண்டார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தலைப்பாகை கட்டி மாலை மரியாதை செய்து பூர்ண கும்ப மரியாதையும் பாத பூஜையும் செய்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் அடிகளார் அவர்கள் அருளாசி வழங்கினார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக