சிறப்பு தீவிர திருத்தம் 2026 ன் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யவும், திரும்ப பெற நாளையும் (16-11-2025) முகாம் நடைபெறவுள்ளது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 நவம்பர், 2025

சிறப்பு தீவிர திருத்தம் 2026 ன் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யவும், திரும்ப பெற நாளையும் (16-11-2025) முகாம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்
சிறப்பு தீவிர திருத்தம் 2026 ன் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யவும், திரும்ப பெற நாளையும் (16-11-2025) முகாம் நடைபெறவுள்ளது - 
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல்.

சிறப்பு தீவிர திருத்தம் 2026 ன் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யவும், திரும்ப பெறவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று நடைபெறும் சிறப்பு முகாமினை தொடர்ந்து வாக்காளர்களுக்கு மேலும் உதவிடும் வகையில் நாளை 16-11-2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மேலும் ஒரு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது. 

இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் பிற துறை பணியாளர்கள் வாக்காளரிடம் இருந்து படிவங்களை பூர்த்தி செய்வதற்கும், படிவங்களை திரும்ப பெறுவதற்கும் உதவி செய்ய உள்ளனர். இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad