நாசரேத் - நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 நவம்பர், 2025

நாசரேத் - நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.

நாசரேத், நவ. 15, நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காசியஸ் மேல்நிலைப் பள்ளியில், "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

முகாமில் குழந்தைகள் நல மருத்துவம், இதய நல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் சிகிச்சை மருத்துவம், பல் சிகிச்சை, கண் நல மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவம், பிசியோதெரபி, நுண்கதிர் மருத்துவம், நுரையீரல் சிகிச்சை, சர்க்கரை நோய் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் நேரடி ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை மாநில தலைவர் செல்வன், மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். 
அதாவது நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் வகுத்தான்குப்பம், அகப்பைகுளம் உட்பட 4 மையங்களில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், மருத்துவ செவிலியர்கள் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை எடுத்துக் கூறினார். 

அதனை கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக மாவட்ட சுகாதார ஆய்வாளர் இடம் மாற்று ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டார். அத்துடன் அங்கிருந்த ஒரு மாற்றுத்திறனாளி மாணவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்து தர ஏற்பாடு செய்தார்.

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் ரா. கௌதம், ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யாழினி, நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலை குமார், நாசரேத் பேரூர் கழக திமுக செயலாளர் ஜமீன் சாலமன், வார்டு கவுன்சிலர்கள் ஐஜினஸ் குமார், எபனேசர் சாமுவேல், அதிசயமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad