25 வருடங்களாக உள்ள தார் சாலையை இரண்டு குடும்பங்கள் ஆக்கிரமிப்பு! சாலையை மீட்டு தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
திருப்பத்தூர் , நவ 3 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் ஊராட்சி தாயப்பன் வட்டம் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர் கள் சுமார் 25 வருடங்களாக அப்பகுதியில் தார் சாலையை உபயோகித்து வந்தனர் இந்த நிலையில் கடந்த மூன்று வருடங் களுக்கு முன்பாக தார்ச்சாலை அமைக் கும் பழுது பார்ப்பு பணி தொடங்கப் பட்டது.அதனைத் தொடர்ந்து அப்பகுதி யில் உள்ள இரண்டு குடும்பத்தினர் சாலையை சேதப்படுத்தி குழி நோண்டி முள்ளு செடிகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் மேலும் அவளியாக பயணித்தால் அந்த இரண்டு குடும்பத்தினரும் ஆபாச வார்த்தைகளால் பேசுவதாகவும் அப்பகுதி மக்கள்ஆதங்கப் படுகின்றனர். எனவே அவர்களிடமிருந்து சாலையை மீட்டு தர வேண்டும் எனவும் மேலும் சாலையை சீர்படுத்தி தர வேண் டும் எனவும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக