குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் தொடர் திருட்டு 2 பேர் கைது ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
குடியாத்தம், நவ 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர ஆய்வாளர் ருக்மாங்கத்தன்.உதவி ஆய்வாளர்கள். ஜெயந்தி ஜெயக்குமார் ஆகியோர் நேற்று இரவு குடியாத்தம்
சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர அப் போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய் தனர் இவர்கள் சரியாக பதிலளிக் கவில்லை பின்னர் போலீஸ் நிலையத் திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் குடியாத்தம் அடுத்த அம்மனா ங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தனசேகர் (வயது 37) குடியாத்தம் அடுத்த சித்தாத் தூர் கிராமத்தை சேர்ந்த கமல் (வயது 28) என தெரிய வந்தது மேலும் இவர்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது
அதன்படி போலீசார் இவர்களிடம் இருந்து குடியாத்தம் பகுதியில் திருடிய 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக