கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தம் ஊராட்சியில் துணை மின் நிலையம் நல்லத் தம்பிக்கு கிராம மக்கள் நேரில் வாழ்த்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தம் ஊராட்சியில் துணை மின் நிலையம் நல்லத் தம்பிக்கு கிராம மக்கள் நேரில் வாழ்த்து!

கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தம் ஊராட்சியில் துணை மின் நிலையம் நல்லத் தம்பிக்கு கிராம மக்கள் நேரில் வாழ்த்து!
திருப்பத்தூர் ,நவ‌ 21 -

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சி மற்றும் அதை சுற்றி யுள்ள பத்துக்கு மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்து 15 வருடங் களுக்கு மேலாக சீரான மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டனர் இது குறித்து திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பியின் கவனத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கொண்டு சேர்த்தனர் அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சட்டமன்றத்தின் கோரிக்கை வைத்தார் அதனை ஏற்று கடந்த வாரம் நத்தம் ஊராட்சியில் 33/11 kv துணை மின் நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள் ளன இதற்கு நன்றி செலுத்தும் விதமாக நேற்று நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் . கந்திலி ஒன்றிய சேர்மன்  திருமுருகன்.மற்றும் திமுக நிர்வாகிகள்   திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு அலுவலகத்தில் நேரில் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்பு ஊர் பொதுமக்கள் அனைவரும் எங்களுக்கு மின்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த  சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் சார்பில் தெரிவித்தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad