310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் கவிழ்ந்த லாரி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் கவிழ்ந்த லாரி.

310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் கவிழ்ந்த லாரி.

தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை 310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் லாரி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு வெட்டு திருத்திகோணம் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது கேஸ் சிலிண்டர் லாரி ரப்பர் தோட்டத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.

இதில் லாரி டிரைவர் மணிகண்டன் உயிர் தப்பினார். குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் லாரியிலிருந்து சிலிண்டரை அப்புறப்படுத்தி லாரியை மீட்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad