சூப்பர் ஹீரோவாக மாறிய பங்குத்தந்தை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

சூப்பர் ஹீரோவாக மாறிய பங்குத்தந்தை.

சூப்பர் ஹீரோவாக மாறிய பங்குத்தந்தை 

கன்னியாகுமரிக்கு வேலை தேடி வந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த விஜயராம்(26) என்ற வாலிபர் கடலில் குளிக்க முயன்ற போது கடல் அலையில் 
சிக்கியதை அடுத்து கடலோர காவல்படை சார்பாக கோவளம் ஊர் பங்குதந்தை சகாய சுனில் அவர்களிடம் உதவி கேட்க பட்டது, இதை தொடர்ந்து உடனடியாக களத்தில் இறங்கிய பங்குத்தந்தை மீனவர்கள் ஜார்ஜ் மைக்கேல், கண்ணையா, ஆன்றின் மற்றும் ஜெரால்டு ஆகியோருடன் வள்ளத்தில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

கடலில் தவித்தவர் ஆபத்தான பகுதியில் இருந்ததால். படகை அவர் இருக்கும் இடம் வரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

உடனே ஆன்றின் மற்றும் ஜெரால்டு இருவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து கடலில் குதித்து அவர் இருக்கும் பகுதிக்கு நீந்தி சென்று மிதவைகளை அவர் உடம்பில் கட்டி படகுக்கு இழுத்து வந்தனர். 

இதை கடற்கரையில் இருந்து பார்த்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆரவாரம் இட்டு கை தட்டி நன்றி தெரிவித்தனர்.


தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad