34 ஆவது வடக்கு மண்டல அறிவியல் மாநாட்டில் 56 இளம் விஞ்ஞானிகள் தேர்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

34 ஆவது வடக்கு மண்டல அறிவியல் மாநாட்டில் 56 இளம் விஞ்ஞானிகள் தேர்வு!

34 ஆவது வடக்கு மண்டல அறிவியல் மாநாட்டில்  56  இளம்  விஞ்ஞானிகள் தேர்வு!
ராணிப்பேட்டை , நவ 23 -
 
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இராணிப் பேட்டை மாவட்டக் கிளையின் சார்பாக வடக்கு மண்டல அளவிலான குழந்தை கள் அறிவியல் மாநாடு இன்று இராணிப் பேட்டை மாவட்டம் அன்னை மிரா பொறி யியல் கல்லூரி  வளாகத்தில்  நடை பெற்றது .  இம் மாநாட்டில் 56  இளம் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான மாநாட்டிற்கு தகுதி பெற்றனர். துவக்க விழாவிற்கு மாவட்டத் தலைவர் அ.கலைநேசன் தலைமை தாங்கினார்.  வடக்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் வேலூர் செ.நா.ஜனார்த் தனன் , திருவண்ணாமலை எ.மோகன், வடசென்னை மலைச்செல்வி காஞ்சிபுரம் செல்லபாண்டி, திருவள்ளுர் எஸ்.குமார், அன்னை மிரா பொறியியற் கல்லூரியின் நிறுவனர் எஸ்.ராமராஸ், செயலர் ஜி.தாமோதரன், முதல்வர் டி.கே.கோபி நாதன், விரவுரையாளர் ஏ.மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
மாநில செயற்குழ உறுப்பினர் க.பூபாலன் வரவேற்புரையாற்றினார்.  மாநில கல்விக்குழ ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.மாதவன், மாநாட்டினை துவக்கி வைத்து பேசினார்.  மேனாள் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். சுப்பிரமணி சிறப்புரையாற்றினார்.
தென்சென்னை மாவட்டச் செயலாளர் வ.அம்பிகா, துணை வட்டாட்சியர் இரா ஜேஸ்வரி, முன்னாள் மாநிலச் செயலா ளர் முத்து சிலுப்பன், கே.விசுவநாதன், என்.கோட்டீஸ்வரி, இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் க.பழனிவேல், மாநிலக் கருத்தாளர் நல்லாசிரியர் முனைவர் க.வே. கிருபானந்தம், மாவட்டப் பொருளாளர் ஜே. ஶ்ரீதர் ஆகியோர் குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கானகருத்தரங் கினை ஒருங்கிணைத்தனர். இந்த மாநாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 88 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங் களிலிருந்து மாணவ மாணவிகள் 100 வழிகாட்டி ஆசிரியர்களுடன் நீடித்த நிலைத்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.  டிசம்பர் 5,6 தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மண்டல அளவிலான மாநாட்டிலிருந்து 28 ஆய்வறிக்கைகள் 56 இளம் விஞ்ஞானி கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பி. ஶ்ரீனிவாசன் இளம் விஞ்ஞானிகளோடு கலந்துரையாடல் நடத்தினார்.  அப்போது இளம் விஞ்ஞானி கள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.  
மதிப்பீட்டாளகளாக  சி அப்துல் அக்கீம் கலை அறிவியல் கல்லூரி பேராசியர்கள் வி.பாத்திமா தஸ்கின்,  பி.அன்பரசி, எல்.திவ்யா, பி. சௌம்யா,  சோளிங்க அரசு கலைக்கல்லூரி கௌரவ பேராசி யர் ஜி.காயத்ரி, எஸ்எஸ்எஸ் கல்லூரி பேரா. மணிமேகலை, ஏசிஎஸ் கல்லூரி பேரா. எஸ்.கோபிநாத், ஆசிரியர்கள்   முனைவர் க.வே.கிருபானந்தம், பரிமளா காந்தி, ஆர்.ஸ்டெல்லா, ஏ.டி.காந்தி, எஸ்.தாளமுத்து நடராசன்,  ஏ.ரேகா, எஸ்.ராம்குமார், டி.ஆர். லட்சுமி ஆகியோர் ஆய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்து தேர்வு செய்தனர். வெற்றிபெற்ற மாணவ ர்களுக்கான பரிசுக்கோப்பைகளை  தி.க. கனகசபை, அக்னிச்சிறகுகள் இயக்கம் பா.தங்கராஜ், புலவர் செ.தமிழ்மணி ஆகியோரும் 300 பேருக்கான மதிய உணவினை புரவலர்கள் பொன்.கு. சரவணன், க.கணேசன் ஆகியோர்  வழங்கினர்.நிர்வாகிகள் ந.வேல்குமார், கோ.துளசிராமன், இரா.ஆலீஸ் மேரி, பிரிட்டோ,   கோ.தணிகேசன், பி.ஶ்ரீவித் யா, து,லட்சுமி, சி.ரஞ்சிதா, சு.தேவிஶ்ரீ, ஜி.நிவேதா, தே.வெங்கட்ராமன் ஆகி யோர் நிகழ்வில் கலந்துகொண்டனர், 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad