தேர்தல் வாக்குறுதி 356 யை உடனடியாக நிறைவேற்ற கோரி ஆட்சியர் அலுவலகத் தில் தமிழ்நாடு செவிலியர்கள்மேம்பாட்டு சங்கத்தினர் தர்ணா போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

தேர்தல் வாக்குறுதி 356 யை உடனடியாக நிறைவேற்ற கோரி ஆட்சியர் அலுவலகத் தில் தமிழ்நாடு செவிலியர்கள்மேம்பாட்டு சங்கத்தினர் தர்ணா போராட்டம்!

தேர்தல் வாக்குறுதி 356 யை உடனடியாக நிறைவேற்ற கோரி ஆட்சியர் அலுவலகத் தில் தமிழ்நாடு செவிலியர்கள்மேம்பாட்டு சங்கத்தினர் தர்ணா போராட்டம்!
திருப்பத்தூர் , நவ 21 -

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில்  தமிழ்நாடு செவிலியர் கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசு எதிராக  கண்டன கோஷங் கள் எழுப்பி மாலை நேர தர்ணா போராட் டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட் டத்தின் முக்கிய கோரிக்கைகளாக இதில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய் துள்ள மேல்முறையீடு வழக்கை கைவிட வேண்டும், நடைமுறையிலிருந்து பறிக் கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 பணியிடங்களை மீண்டும் உரு வாக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதி 356யை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், MRB தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 11 மாத கால ஒப்பந்த பணி முறையை அறவே ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயலாளர் பாண்டியன்,  பொருளாளர் ராஜ்குமார், நிள அளவை துறை மாவட்ட பொருளாளர் வினோத் வட்ட கிளை பொறுப்பாளர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் மகாலட்சுமி, அர்ச்சனா, கவிபிரியா, தமிழரசி, கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad