மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி களுக்கான ஓவியப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் துவக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி களுக்கான ஓவியப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் துவக்கம்

மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி களுக்கான ஓவியப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் துவக்கம்!
திருப்பத்தூர்,நவ 21 -

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட அளவிலான  மாற்றுத்திறனாளிகளுக் கான ஓவிய போட்டிகள் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் . மாணவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற மாற்றுத்திறனாளி குழந்தை களின் வரவேற்பை மெய்சிலிர்ப்புடன் ஏற்ற மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்ட அரங்கில் வரும் டிசம்பர் 3 மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது ‌. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். குழந்தைகள் ஆர்வமுடன் ஓவியம் வரைவதை நெருங்கிச் சென்று பார்வையிட்டு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1000 இரண்டாம் பரிசாக ரூபாய் 500 மூன்றாம் பரிசாக ரூபாய் 250 வழங்கப்பட உள்ளது. மேலும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக் காக உடன் அமர்ந்து ஓவியம் தீட்டியது காண்போர் மனதை உருக்கும் வண்ணம் அமைந்திருந்தது. இப்போட்டியில் சுமார் 65 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்று ஆர்வமுடன் ஓவியம் வரைந் தனர் . நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் கண்ணன், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பலர் பங்கு பெற்றனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad