ரூ 35.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள மேம்பாலம் தமிழ் நாடு முதல்வர் மேம்பாலம் காணொளி வாயிலாக திறப்பு !
குடியாத்தம் , செப் 1
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேலாளத்தூர் வளத்தூர் ரயில் நிலையம் இடையே மேல் மேம்பாலம் ரூ. 35.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மேல்பட்டி மற்றும் வளத்தூர் ரயில் நிலை யம் இடையே மேல் மேம்பாலம் ரூ. 35.10 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலங்களை தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. குடியாத்தம் அடுத்த பேர்ணம்பட்டு வட்டம் மேல்பட்டி வளத்தூர் இடையே கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை பார்வையிட்டு மரக்கன்று நடவு செய்தார்
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் பேர்ணம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்தனன் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் வத்சலா வித்யானந்தி கோட்ட பொறியாளர்கள் சுந்தர் தனசேக ரன் ஆதவன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்திரகுமாரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக