அத்திஇயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பாக 8 வது தேசிய இயற்கை மருத்துவ தினம் !
குடியாத்தம் , நவ 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம், காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பாக 8 வது தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடபட்டதுஇதில் முன்னாள் தெலுங்கான மற்றும் புதுச் சேரி (பொறுப்பு ) மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆர்வத்துடனும் விளையாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் கல்வியை மன நிறை யோடு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் மற்றும் இயற்கை மருத்து வம் என்பது நோயை வருமுன் காக்கும் மருத்துவம் அதனால் யோகா மற்றும் தியானம் செய்து ஆரோக்கியமாக வாழலாம் என எடுத்து கூறி 6 ஆம் ஆண்டு புதிய மருத்துவ மாணவர்களு க்கு வெள்ளை ஆடை உடுத்தி மருத்துவர் களாக வாழ்த்து தெரிவித்தார் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் மற்றும் அத்தி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சௌ சுகநாதன் அவர்கள் முன்னிலை வகித்து இயற்கை மருத்துவ படிப்பை நன்றாக படித்து அதில் வரும் புதுமையை கொண்டு வந்து பொது மக்கள் பயன் பெறும் வகையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்கள் சிறப்பு இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட பேராசிரியர் மங்கையர்கரசி மற்றும் புதுச்சேரி கவிஞர் ஆலா ஆகி யோர்கள் நோய்களுக்கான மருந்து கள் பழைய இயற்கை மருத்துவ கவிதை மூலம் விளக்கம் அளித்தனரீ அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார், அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால் ராஜ் சீனித்துரை மற்றும் குடியாத் தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா குமரவேல் ஆகியோர் உடன் இருந்தனர் .
மேலும் பேராசிரியர்கள் , மருத்துவர்கள் மற்றும் அத்தி இயற்கை மருத்துவ மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோ ர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர் . மேலும் இயற்கை மருத்துவ மாணவ மாணவிகள் பரதநாட்டியம் ஆடி விழா வினை சிறக்க செய்தனர் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேபி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக