இராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சி, சேர்மன் தெருவில் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் பழுதடைந்து கிடந்த சாலையானது, தற்போது புதிய தார் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி மன்றத் தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ஜெய ஆனந்த் முயற்சியால் இந்தச் சாலைப் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஏர்வாடி தர்ஹா சேர்மன் தெருச் சாலை, பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, இந்தச் சாலைப் பணிக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்ட கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய ஆனந்த், கிடப்பில் இருந்த இந்தப் பணிக்கான அரசு நிதி ஒதுக்கீட்டைப் பெற விரைந்து நடவடிக்கை எடுத்து அவரது முயற்சியின் பலனாக, சேர்மன் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
பல ஆண்டுகளாகப் பழுதடைந்து கிடந்த சாலையை உடனடியாகச் சீரமைத்து, மக்களின் போக்குவரத்தைச் சுலபமாக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய ஆனந்த் க்கு ஏர்வாடி தர்ஹா சேர்மன் தெருப் பகுதி மக்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் தங்களது நீண்டநாள் குறையாக இருந்த சாலை வசதி தீர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.
செய்தியாளர் செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக