திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு ஸ்தலமாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு மாதம்தோறும் திருச்செந்தூர் முருகனை வழிபடுவதை  வழக்கமாகக் கொண்டுள்ளார். 
இந்த நிலையில் இன்று தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார். முன்னதாக கோவிலில் உள்ள திருசுதந்திரர்கள் சார்பில் அவருக்கு ரோஜா பூ மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது.

இதனையடுத்து கோவில் யானை தெய்வானையிடம் ஆசிர்வாதம் பெற்று தங்க தேரை இழுத்து கிரி பிரகாரம் வளம் வந்து வழிபட்டார்.பின்னர்   யோகி பாபு உடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad