இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரண்டு தினங்களுக்கு முன் இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது இதில் காவலர்கள் இருவர் உட்பட பலர் காயமடைந்தனர்.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று 06.11.2025 பரமக்குடி மதுரை இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஐந்து சாலை சந்தித்திப்பில் ஒரு சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கிடைத்த தகவலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஸ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திடீர் பதற்றம் ஏராளமான போலீசார் குவிப்பு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட கலவரத்தால் இன்று ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தகவலால் பதற்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக